GOVERNMENT OF INDIA
Accessibility
Accessibility Tools
Color Adjustment
Text Size
Navigation Adjustment
Screen Reader iconScreen Reader

Viksit Bharat Quiz 2026 (Tamil)

Start Date : 9 Jun 2026, 12:00 pm
End Date : 30 Jun 2026, 11:45 pm
Closed
Quiz Banner
  • 10 Questions
  • 300 Seconds
Login to Play Quiz

About Quiz

இந்தியாவின் 12 ஆண்டுகால வளர்ச்சிப் பயணத்தைக் கொண்டாடும் வகையிலும் மற்றும் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்கு பார்வையை முன்னெடுத்தும், மைகவ் நாடு முழுவதிலும் உள்ள குடிமக்களை வளர்ச்சியடைந்த பாரதம் வினாடி வினா 2026-இல் பங்கேற்க அழைக்கிறது.

இந்த சுவாரசியமான முன்முயற்சி, பங்கேற்பாளர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சாதனைகளைப் பற்றி தெரிந்துகொள்ள ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இந்த வினாடி வினா உள்கட்டமைப்பு, டிஜிட்டல் மாற்றம், கல்வி, சுகாதாரம், பெண்கள் மேம்பாடு, சமூக நலன், கண்டுபிடிப்புகள் மற்றும் 2047-க்குள் இந்தியாவை ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான தொலைநோக்கு பார்வை போன்ற முக்கிய துறைகளின் வளர்ச்சியை உள்ளடக்கியதாக இருக்கும்.

விழிப்புணர்வை அதிகரிப்பது, குடிமக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பது மற்றும் மிகவும் வலுவான, உள்ளடக்கிய மற்றும் எதிர்காலத்திற்கு தயாரான இந்தியாவை வடிவமைக்கும் கூட்டு முயற்சிகளைக் கொண்டாடுவது ஆகியவற்றை இந்த வினாடி வினா நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

பரிசு – 

வினாடி வினாவில் மிகச்சிறந்த திறனை வெளிப்படுத்தும் வெற்றியாளருக்கு ₹51,000/- ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

இரண்டாவது சிறந்த திறனை வெளிப்படுத்துபவருக்கு ₹31,000/- ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

மூன்றாவது சிறந்த திறனை வெளிப்படுத்துபவருக்கு ₹21,000/- ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

அடுத்த சிறந்த 50 வெற்றியாளர்களுக்கு தலா ₹4,000/- ஆறுதல் பரிசாக வழங்கப்படும்.

கூடுதலாக, அதற்கு அடுத்த சிறந்த 100 வெற்றியாளர்களுக்கு தலா ₹3,000/- ஆறுதல் பரிசாக வழங்கப்படும்.

பங்கேற்கும் அனைத்துப் போட்டியாளர்களுக்கும் டிஜிட்டல் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

 

Terms and Conditions

1.  இந்த வினாடி-வினா அனைத்து இந்திய குடிமக்களுக்கும் திறந்திருக்கும்.

2.  பங்கேற்பாளர் ‘வினாடி-வினாவை தொடங்கு’ என்பதைக் கிளிக் செய்தவுடன் வினாடி-வினா தொடங்கும்.

3.  வினாடி-வினா அமைப்பாளர்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய ஊழியர்கள், இந்த வினாடி-வினாவில் பங்கேற்க தகுதியற்றவர்கள். இந்த தகுதியின்மை அவர்களின் உடனடி குடும்ப உறுப்பினர்களுக்கும் பொருந்தும்.

4.  வெற்றியாளர் பட்டியலில் தகுதி பெறுவதற்கு, பங்கேற்பாளர்களின் மைகவ் சுயவிவரம் புதுப்பிக்கப்பட்டதாகவும் துல்லியமாகவும் இருப்பது கட்டாயமாகும்.

5.  இது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குட்பட்ட வினாடி-வினா: 10 கேள்விகளுக்குப் பதிலளிக்க பங்கேற்பாளருக்கு 300 வினாடிகள் வழங்கப்படும்.

6.  ஒரு பங்கேற்பாளர் ஒரு முறை மட்டுமே வினாடி-வினாவை எழுத முடியும். ஒரே பங்கேற்பாளரிடமிருந்து பல பதிவுகள் கண்டறியப்பட்டால், அந்த பங்கேற்பாளர் வினாடி-வினாவிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்.

7.  300 வினாடிகளுக்குள் அனைத்து சரியான பதில்களையும் அளிப்பதே வினாடி-வினாவின் வெற்றி அளவுகோலாகும்.

8.  நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, வெற்றியாளர்கள் தேர்வு கணினியால் உருவாக்கப்படும் சீரற்ற முறை மூலம் நடத்தப்படும். குறிப்பிடப்பட்ட வினாடி-வினா வெற்றி அளவுகோல்களை பூர்த்தி செய்யும் அனைத்து பங்கேற்பாளர்களும் (அனைத்து சரியான பதில்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பித்தல் உட்பட), தகுதியான பதிவுகளின் மையப்படுத்தப்பட்ட தொகுப்பில் சேர்க்கப்படுவார்கள். வெற்றியாளர்கள் முற்றிலும் தானியங்கி சீரற்ற தேர்வு செயல்முறை மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

9.  வினாடி-வினா போட்டியின் அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு (ஏதேனும் திருத்தங்கள் அல்லது கூடுதல் புதுப்பிப்புகள் உட்பட) பங்கேற்பாளர்கள் கட்டுப்பட வேண்டும்.

10. நேர்மை மற்றும் சம வாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில், வெற்றியாளர் பட்டியலுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு உறுப்பினர் மட்டுமே பரிசீலிக்கப்படுவார்.

11.  வினாடி-வினாவில் பங்கேற்கும் போது ஆள்மாறாட்டம், இரட்டைப் பங்கேற்பு போன்ற முறைகேடுகள் அல்லது ஏதேனும் நியாயமற்ற/போலியான வழிமுறைகளைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், அந்தப் பங்கேற்பு செல்லாததாக அறிவிக்கப்பட்டு நிராகரிக்கப்படும். இது தொடர்பாக வினாடி-வினா போட்டியின் அமைப்பாளர்கள் இறுதி முடிவு எடுக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர்.

12.  வெற்றியாளர்கள் தேர்வு blog.mygov.in என்ற இணையதளத்தில் அறிவிக்கப்படும். மேலும், நிகழ்வு பற்றிய கூடுதல் விவரங்கள் வெற்றியாளர்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு மூலம் பகிரப்படும். எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்படும் பட்சத்தில், போட்டியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை எந்த நேரத்திலும் திருத்துவதற்கோ அல்லது போட்டியை ரத்து செய்வதற்கோ அமைப்பாளர்களுக்கு உரிமை உண்டு.

13.  கணினி பிழை அல்லது அமைப்பாளர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வேறு ஏதேனும் பிழைகள் காரணமாக தொலைந்து போன, தாமதமான, முழுமையடையாத அல்லது அனுப்பப்படாத பதிவுகளுக்கு அமைப்பாளர்கள் எந்தப் பொறுப்பையும் ஏற்க மாட்டார்கள்.

14.  உங்கள் பதிவு சமர்ப்பிக்கப்பட்டதற்கான ஆதாரம், அது அமைப்பாளர்களால் பெறப்பட்டதற்கான ஆதாரமாகாது என்பதை நினைவில் கொள்ளவும்.

15.  அனைத்து சிக்கல்கள்/சட்டப்பூர்வ புகார்கள் டெல்லி அதிகார வரம்பிற்குள் மட்டுமே உட்பட்டவை. இந்த நோக்கத்திற்காக செய்யப்படும் செலவுகள் தொடர்புடையவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும்.

16.  இனிவரும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இந்திய சட்டங்கள் மற்றும் இந்திய நீதித்துறையின் தீர்ப்புகளுக்கு உட்பட்டதாக இருக்கும்.