மாற்றத்திற்கான 11 ஆண்டுகளை இந்தியா கொண்டாடும் நிலையில், இந்த தருணமானது மைல்கல்லை விட உயர்ந்ததாக உள்ளது – இது விக்ஷித் பாரத்தை வடிவமைப்பதற்கான நாட்டின் குறிப்பிடத்தக்க பயணத்தின் கொண்டாட்டமாகும். கடந்த பத்தாண்டுகளில், பொருளாதார வளர்ச்சி போன்ற துறைகளில் முக்கிய சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது, உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், தேசிய பாதுகாப்பு, மற்றும் சமூக நலன் ஆகிய அனைத்தும் தன்னிறைவு மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட தேசத்தை கட்டியெழுப்பும் பார்வையுடன் செய்யப்பட்டுள்ளன.
விக்ஷித் பாரத் 2025 வினாடி வினா போட்டியில் பங்கேற்பதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் குறித்த தங்கள் அறிவையும் புரிதலையும் சோதிக்க அனைத்து குடிமக்களையும் மைகவ் அழைக்கிறது. இந்த வினாடி வினா பொது விழிப்புணர்வை மேம்படுத்துவதையும், இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கூட்டு சாதனைகளைக் கொண்டாடுவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
பரிசளிப்பு:
1.வினாடி வினாவில் மிக சிறப்பாக பங்கேற்பவருக்கு ₹ 1,00,000/- ரொக்கப் பரிசு வழங்கப்படும்
2. இரண்டாவது சிறந்த பங்கேற்பாளருக்கு ₹ 75,000/- ரொக்கப் பரிசு வழங்கப்படும்
3. மூன்றாவது சிறந்த பங்கேற்பாளருக்கு ₹ 50,000/- ரொக்கப் பரிசு வழங்கப்படும்
4. அடுத்த சிறந்த 100 பங்கேற்பாளர்களுக்கு தலா ₹ 2,000/- ஆறுதல் பரிசுகளாக வழங்கப்படும்.
5.மேலும், அடுத்த சிறந்த 200 பங்கேற்பாளர்களுக்கு தலா ₹1,000/- ஆறுதல் பரிசுகளாக வழங்கப்படும்.
6. பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பங்கேற்றதற்கான டிஜிட்டல் சான்றிதழ் வழங்கப்படும்.
1. வினாடி வினாவில் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் பங்கேற்கலாம்.
2. வினாடி வினாவானது ‘வினாடி வினா விளையாடுக’ என்பதை பங்கேற்பாளர் கிளிக் செய்தவுடன் தொடங்கும்.
3. இது 11 கேள்விகளுக்கு 330 வினாடிகளில் பதிலளிக்க வேண்டிய நேரத்திற்குட்பட்ட வினாடி வினாவாகும். எதிர்மறை மதிப்பெண்கள் கிடையாது.
4. கூடுதல் தகவல்தொடர்புக்காக தங்கள் மைகவ் சுயவிவரத்தை பங்கேற்பாளர்கள் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க வேண்டும். முழுமையற்ற சுயவிவரம் வெற்றியாளராக தகுதி பெறாது.
5. ஒரு பயனரால் ஒரு முறை மட்டுமே பங்கேற்க முடியும், மேலும் ஒருமுறை சமர்ப்பித்த பதில்களை திரும்பப் பெற முடியாது. ஒரே பங்கேற்பாளர் / மின்னஞ்சல் முகவரி/மொபைல் எண் போன்றவற்றிலிருந்து பல பங்கேற்புகள் ஏற்று கொள்ளப்படாது.
6. மைகவ் ஊழியர்கள் அல்லது வினாடி வினாவை நடத்துபவர்களுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பிலுள்ள ஊழியர்கள், பங்கேற்க தகுதியானவர்கள் அல்ல. இந்த தகுதியின்மை அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் பொருந்தும்.
7. அதிக பங்கேற்பையும் போட்டியில் நேர்மையையும் ஊக்குவிக்க, ஒரு குடும்பத்தில் ஒரு வெற்றியாளர் மட்டுமே பரிசுக்கு தகுதியுடையவர்.
8. பங்கேற்பாளரின் பங்கேற்போ தொடர்போ வினாடி வினாவிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருந்தால், பங்கேற்பாளரின் பங்கேற்பை தகுதி நீக்கம் செய்வதற்கோ மறுப்பதற்கோ அனைத்து உரிமைகளும் மைகவ்-விடம் உள்ளது. பெறப்பட்ட தகவல்கள் சட்டவிரோதமானவை, முழுமையற்றவை, சேதமடைந்தவை, தவறானவை அல்லது பிழையானவை என்றால் பங்கேற்பு செல்லுபடியாகாது.
9. கணினிப் பிழை அல்லது ஏற்பாட்டாளரின் நியாயமான கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வேறு ஏதேனும் பிழை காரணமாக தொலைந்து போன, தாமதமான அல்லது முழுமையடையாத அல்லது அனுப்பப்படாத பதில்களுக்கு ஏற்பாட்டாளர்கள் எந்தப் பொறுப்பையும் ஏற்க மாட்டார்கள். பதிவு சமர்ப்பித்ததற்கான ஆதாரம், அதைப் பெற்று கொண்டதற்கான ஆதாரம் அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.
10. எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்பட்டால், எந்த நேரத்திலும் போட்டியின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் திருத்தவதற்கோ அல்லது பரிசீலிக்கப்பட்டபடி போட்டியை ரத்து செய்வதற்கோ அனைத்து உரிமைகளும் மைகவ்-விடம் உள்ளது. சந்தேகத்தை தவிர்ப்பதற்காக, இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மாற்றும் திறனும் இதில் அடங்கும். அனைத்து அப்டேட்டுகளையும் பங்கேற்பாளர்கள் வலைத்தளத்தில் பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
11. வினாடி வினா குறித்த மைகவ்-வின் முடிவே இறுதியும் கட்டாயமும் ஆனது, மேலும் இது தொடர்பாக எதுவும் பதிவு செய்யப்படாது.
12. அனைத்து சர்ச்சைகள்/சட்ட ரீதியான புகார்கள் டெல்லியின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை. இந்த நோக்கத்திற்காக செய்யப்படும் செலவுகள் கட்சிகள் தங்களுக்குள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
13. வினாடி வினா போட்டியில் பங்கேற்பதன் மூலம், பங்கேற்பாளர்கள் வினாடி வினா போட்டியின் திருத்தங்கள் அப்டேட்கள் உட்பட அனைத்து விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் இணங்க வேண்டும்.
14. மேலும் விதிமுறைகளும் நிபந்தனைகளும் இந்திய சட்டங்களாலும் இந்திய நீதித்துறையின் தீர்ப்புகளாலும் நிர்வகிக்கப்படும்.