இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி தேசிய கலை மையம், மைகவ் உடன் இணைந்து, பிரிவினை கொடூரங்களின் நினைவு தினமான ஆகஸ்ட் 14-ம் தேதி அன்று நடைபெறும் வினாடி வினா போட்டியில் பங்கேற்பதற்கு இந்தியாவிலுள்ள அனைத்து பள்ளி மாணவர்களையும் அழைக்கிறது.
இந்த வினாடி வினாவானது ஆகஸ்ட் 14-ம் தேதி பிரிவினை கொடூரங்களின் நினைவு தினத்தை நினைவுகூரும் வகையிலும், இந்திய பிரிவினையின்போது ஏற்பட்ட துயரமான மனித நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெகுமதிகள்: பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பங்கேற்புக்கான இ-சான்றிதழ் வழங்கப்படும், மேலும் அதிகமாக ஸ்கோர் செய்யும் முதல் 10 மாணவர்களுக்கு தலா ₹5,000/- ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
1. வினாடி வினாவில் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் பங்கேற்கலாம். குறிப்பாக பள்ளி மாணவர்கள் பங்கேற்பதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
2. பங்கேற்பதற்கு நுழைவு கட்டணம் எதுவும் இல்லை.
3. வினாடி வினா பங்கேற்பாளர் ‘வினாடி வினாவில் பங்கேற்கவும்’ என்பதைக் கிளிக் செய்தவுடன் தொடங்கும்.
4. வினாடி வினாவானது பல தேர்வு கேள்விகளைக் (MCQ-கள்) கொண்டிருக்கும்.
5. அனைத்து கேள்விகளுக்கும் நான்கு தேர்வுகள்(Options) இருக்கும், அதில் ஒன்று மட்டுமே சரியான பதில்.
6. ஒரே பங்கேற்பாளரிடமிருந்து பல உள்ளீடுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
7. தனது மைகவ் சுயவிவரம் துல்லியமாகவும் புதுப்பிக்கப்பட்டதாகவும் இருப்பதை பங்கேற்பாளர் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
8. இது ஒரு குறிப்பிட்ட கால அவகாச வினாடி வினா: 10 கேள்விகளுக்கு பதிலளிக்க உங்களுக்கு 300 வினாடிகள் வழங்கப்படும்.
9. வினாடி வினாவில் பங்கேற்கும்போது ஆள்மாறாட்டம், இரட்டைப் பங்கேற்பு போன்ற முறைகேடான வழிகள்/மோசடிகள் கண்டறியப்பட்டால், பங்கேற்பு ரத்து செய்யப்பட்டு நிராகரிக்கப்படும். வினாடி வினா போட்டியின் அமைப்பாளர்களுக்கு இது தொடர்பாக உரிமை உண்டு.
10. கணினி பிழை அல்லது அமைப்பாளர்களின் நியாயமான கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வேறு ஏதேனும் பிழை காரணமாக தொலைந்து போன, தாமதமான அல்லது முழுமையற்ற அல்லது அனுப்பப்படாத உள்ளீடுகளுக்கு அமைப்பாளர்கள் எந்தப் பொறுப்பையும் ஏற்க மாட்டார்கள். உள்ளீட்டைச் சமர்ப்பித்ததற்கான ஆதாரம், அதைப் பெற்றதற்கான ஆதாரம் அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.
11. எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்பட்டால், எந்த நேரத்திலும் வினாடி வினாவைத் திருத்தவோ திரும்பப் பெறவோ அமைப்பாளர்களுக்கு உரிமை உண்டு. சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக, இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் திருத்துவதற்கான உரிமையும் இதில் அடங்கும்.
12. வினாடி வினா தொடர்பான அமைப்பாளர்களின் முடிவே இறுதியானது, மேலும் இது தொடர்பாக எந்த கடிதப் பரிமாற்றமும் மேற்கொள்ளப்படாது.
13. அனைத்து சர்ச்சைகள்/சட்ட புகார்களும் டெல்லி நீதிமன்ற அதிகார வரம்பிற்கு மட்டுமே உட்பட்டது. இதற்காக ஏற்படும் செலவுகளை சம்பந்தப்பட்ட தரப்பினரே ஏற்க வேண்டும்.
14. வினாடி வினாவில் பங்கேற்பதன் மூலம், ஏதேனும் திருத்தங்கள் அல்லது கூடுதல் புதுப்பிப்புகள் உட்பட வினாடி வினாவின் அனைத்து விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் பங்கேற்பாளர்கள் கட்டுப்பட வேண்டும்.
15. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இந்திய சட்டங்கள் மற்றும் இந்திய நீதி அமைப்பின் தீர்ப்புகளால் நிர்வகிக்கப்படும்.