
தேசிய விண்வெளி தின வினாடி வினா 2026-ஐ மைகவ் மீண்டும் வழங்குகிறது!
வணக்கம், விண்வெளி ஆர்வலர்களே! தயாராகுங்கள்!
இந்தியாவின் விண்வெளிப் பயணம் புதிய உயரங்களை எட்டி வருகிறது. இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பயணத்தை வடிவமைத்துள்ள வியக்கத்தக்க சாதனைகள், விண்வெளித் திட்டங்கள், முக்கிய மைல்கற்கள் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகள் குறித்து நீங்கள் எந்த அளவுக்கு அறிந்திருக்கிறீர்கள் என்பதைச் சோதித்துப் பார்க்க இதுவே சரியான நேரம்.
தேசிய விண்வெளி தினம் 2026, -ஐ முன்னிட்டு, தேசிய விண்வெளி தின வினாடி வினா 2026-ல் பங்கேற்று, ஆர்வம், புதுமை மற்றும் ஆய்வு மனப்பான்மையைக் கொண்டாடுமாறு மைகவ் உங்களை அன்புடன் அழைக்கிறது. இந்தத் தொடர்ச்சியான முயற்சிகளே இந்தியாவை நட்சத்திரங்களை நோக்கி தொடர்ந்து அழைத்துச் செல்கின்றன!
அப்படியானால், உங்கள் விண்வெளி அறிவைச் சோதிக்கத் தயாரா?
தயாராக இருங்கள், விண்வெளி ஆர்வலர்களே! கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது!
பரிசுகள்:
முதல் பரிசு: INR 1,00,000/-
இரண்டாம் பரிசு: INR 75,000/-
மூன்றாம் பரிசு: INR 50,000/-
அடுத்த 100 வெற்றியாளர்களுக்கு INR 2,000/- பரிசாக வழங்கப்படும்.
அடுத்த 200 வெற்றியாளர்களுக்கு INR 1,000/- பரிசாக வழங்கப்படும்.
வினாடி வினாவில் முதல் 100 இடங்களைப் பெறும் வெற்றியாளர்களுக்கு ISRO வளாகத்தைப் பார்வையிடும் வாய்ப்பும் வழங்கப்படும்.
1. வினாடி வினாவில் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் பங்கேற்கலாம்.
2. ‘வினாடி வினாவைத் தொடங்குக’ என்பதை பங்கேற்பாளர் கிளிக் செய்தவுடன் வினாடி வினா தொடங்கும்.
3. 300 வினாடிக்குள் அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில்களை அளிப்பதே வினாடி வினாவின் வெற்றி அளவுகோலாகும்.
4. நியாயத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, வெற்றியாளர்கள் தேர்வு முறைமை மூலம் உருவாக்கப்படும் சீரற்ற தேர்வு முறையில் மேற்கொள்ளப்படும். அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில்களை அளித்து, நிர்ணயிக்கப்பட்ட, காலக்கெடுவிற்குள் வினாடி வினாவைச் சமர்ப்பிப்பது உள்ளிட்ட குறிப்பிடப்பட்ட வெற்றி அளவுகோல்களைப் பூர்த்தி செய்யும், அனைத்து பங்கேற்பாளர்களும் தகுதியான பதிவுகளின் மையப்படுத்தப்பட்ட தொகுப்பில் சேர்க்கப்படுவார்கள். வெற்றியாளர்கள் தானியங்கி முறையில் மேற்கொள்ளப்படும் சீரற்ற தேர்வு செயல்முறையின் மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
5. மேலும் தொடர்பு கொள்வதற்காக, தங்கள் மைகவ் சுயவிவரம் புதுப்பிக்கப்பட்டுள்ளதை பங்கேற்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும். முழுமையற்ற சுயவிவரம் வெற்றியாளராக தகுதி பெறாது.
6. கேள்வி வங்கியிலிருந்து தானியங்கி முறையில் தோராயமாக கேள்விகள் தேர்வு செய்யப்படும்.
7. ஒவ்வொரு பங்கேற்பாளரும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடி மூலம் ஒரு முறை மட்டுமே வினாடி வினாவை விளையாடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஒரே மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பங்கேற்பதற்காக பயன்படுத்தக்கூடாது.
8. மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி இரண்டையும் பயன்படுத்தி ஒரு பங்கேற்பாளர் விளையாடியிருந்தால், சமர்ப்பிக்கப்பட்ட முதல் உள்ளீடு மட்டுமே செல்லுபடியாகும் மற்றும் வெற்றியாளர் தேர்வு செயல்முறைக்கு தகுதியாகும்.
9. முந்தைய ஆண்டுகளின் சந்திரயான்-3 வினாடி வினா மற்றும் தேசிய விண்வெளி தின வினாடி வினாவின் முதல் 3 வெற்றியாளர்கள், முதல் 3 பரிசுகளைப் பெறத் தகுதியுடையவர்களாக இருக்கமாட்டார்கள். முந்தைய ஆண்டுகளின் சந்திரயான்-3 வினாடி வினா மற்றும் தேசிய விண்வெளி தின வினாடி வினாவில் வெற்றி பெற்று, ஏற்கனவே ISRO-வைப் பார்வையிட்ட வெற்றியாளர்கள், தேசிய விண்வெளி தின வினாடி வினா 2026-க்கான ISRO வளாகப் பார்வைக்கு தகுதியுடையவர்களாக இருக்கமாட்டார்கள்.
10. எதிர்பாரா நிகழ்வுகள் ஏற்பட்டால் எந்த நேரத்திலும் வினாடி வினாவை திருத்தவோ அல்லது நிறுத்தவோ மைகவ்வுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. சந்தேகத்தை தவிர்ப்பதற்காக, விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மாற்றும் உரிமையும் இதில் அடங்கும்.
11. எந்தவொரு பங்கேற்பாளரின் பங்கேற்போ தொடர்போ வினாடி வினாவிற்கு தீங்கு விளைவிக்கும் என்று கருதினால், எந்தவொரு பங்கேற்பாளரின் பங்கேற்பையும் தகுதி நீக்கம் செய்யவோ மறுக்கவோ மைகவ் அனைத்து உரிமைகளையும் கொண்டுள்ளது. பெறப்பட்ட தகவல்கள் சட்டவிரோதமானவை, முழுமையற்றவை, சேதமடைந்தவை, தவறானவை அல்லது பிழையானவை என்றால் பங்கேற்பு செல்லுபடியாகாது.
12. கணினிப் பிழை அல்லது ஏற்பாட்டாளரின் நியாயமான கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வேறு ஏதேனும் பிழை காரணமாக தொலைந்து போன, தாமதமான அல்லது முழுமையடையாத அல்லது அனுப்பப்படாத உள்ளீடுகளுக்கு மைகவ் எந்தப் பொறுப்பையும் ஏற்காது. உள்ளீட்டை சமர்ப்பித்ததற்கான ஆதாரம், அதைப் பெற்றதற்கான ஆதாரம் அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.
13. மைகவ் ஊழியர்கள் அல்லது வினாடி வினாவை நடத்துவதில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடைய ஊழியர்கள், வினாடி வினாவில் பங்கேற்கத் தகுதியற்றவர்கள். இந்த தகுதியின்மை அவர்களின் உடனடி குடும்ப உறுப்பினர்களுக்கும் பொருந்தும்.
14. வினாடி வினா குறித்த மைகவ்-இன் முடிவே இறுதியானது மற்றும் பிணைக்கத்தக்கது, மேலும் இது தொடர்பாக எந்தவித புகாரும் கருத்தில் கொள்ளப்படாது.
15. இதில் கலந்து கொள்பவர்கள் அனைத்து அப்டேட்டுகளுக்காக தேவையான உள்ளடக்கத்தை தவறாமல் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
16. வெற்றிகரமாக முடித்த பின்னர், பங்கேற்பாளர்கள் தங்கள் பங்கேற்பு மற்றும் நிறைவை அங்கீகரிக்கும் டிஜிட்டல் பங்கேற்பு சான்றிதழை தாமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
17. வினாடி வினாவில் பங்கேற்பதன் மூலம், பங்கேற்பாளர்கள் ஏதேனும் திருத்தங்கள் அல்லது கூடுதல் புதுப்பிப்புகள் உட்பட வினாடி வினா போட்டியின் அனைத்து விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் இணங்க வேண்டும்.
18. அனைத்து தகராறுகள் / சட்டப்பூர்வ புகார்களும் டெல்லி நீதிமன்றங்களின் அதிகார வரம்பிற்கு மட்டுமே உட்பட்டவையாகும். இந்த நோக்கத்திற்காக செய்யப்படும் செலவுகள் தொடர்புடையவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும்.
19. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இனிமேல் இந்திய சட்டங்கள் மற்றும் இந்திய நீதித்துறையின் தீர்ப்புகளால் நிர்வகிக்கப்படும்.