ஒவ்வொரு இந்தியரும் மூவர்ணக் கொடியை வீட்டிற்கு கொண்டு வந்து, பெருமையுடன் அதை ஏற்றி நமது நாட்டின் சுதந்திரத்தைக் கொண்டாடுவதை “ஹர் கர் திரங்கா” பிரச்சாரம் ஊக்குவிக்கிறது. இந்திய தேசிய கொடி ஒரு சின்னம் மட்டுமல்ல, நமது ஒட்டுமொத்த பெருமை மற்றும் ஒற்றுமையின் ஆழமான பிரதிநிதித்துவமாகும்.
காலம் காலமாக, கொடியுடனான நமது உறவு பெரும்பாலும் முறையானதாகவும் தொலைதூரமானதாகவும் இருந்து வருகிறது, ஆனால் அதை ஆழ்ந்த தனிப்பட்ட மற்றும் மனப்பூர்வமான தொடர்பாக மாற்றுவதற்கு இந்த பிரச்சாரம் முயல்கிறது. கொடியை நம் வீடுகளுக்குள் கொண்டு வருவதன் மூலம், நாம் சுதந்திர தினத்தை மட்டும் கொண்டாடவில்லை, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான நமது உறுதிப்பாட்டின் நிலையான வெளிப்பாட்டைத் தழுவுகிறோம்.
“ஹர் கர் திரங்கா” முன்முயற்சி ஒவ்வொரு குடிமகனிலும் ஆழமான தேசபக்தி உணர்வைத் தூண்டி, நமது தேசிய கொடியின் முக்கியத்துவத்தைப் பற்றிய அதிக புரிதலை வளர்ப்பதற்கு முயற்சிக்கிறது.
இந்த உணர்வில், இந்தியாவின் மதிப்பிற்குரிய தேசியக் கொடியான நமது அன்பான மூவர்ணக் கொடி பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்காக, கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து மைகவ் “ஹர் கர் திரங்கா வினாடி வினா 2025”-ஐ ஏற்பாடு செய்கிறது.
பரிசளிப்பு : – முதல் 100 வெற்றியாளர்களுக்கு 2,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்.
1.வினாடி வினாவில் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் பங்கேற்கலாம்.
2.வினாடி வினா போட்டியில் பங்கேற்பதற்கான அனைத்து விதிகளுக்கும் ஒழுங்குமுறைகளுக்கும் பங்கேற்பாளர் அவ்வப்போது கட்டுப்பட வேண்டும்.
3.சமர்ப்பிக்கப்பட்ட பிறகு பதிவை திரும்பப் பெற முடியாது.
4.இது 300 வினாடிகளில் பதிலளிக்க வேண்டிய 10 கேள்விகளைக் கொண்ட வினாடி வினா.
5.தங்கள் மைகவ் சுயவிவரத்தை புதுப்பிக்குமாறு பங்கேற்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
6.தங்கள் அடிப்படை விவரங்களை பங்கேற்பாளர்கள் நிரப்ப/புதுப்பிக்க வேண்டும். பங்கேற்பாளர்கள் தங்கள் விவரங்களைச் சமர்ப்பித்து வினாடி வினாவில் பங்கேற்பதன் மூலம், விவரங்களை உறுதிப்படுத்துதல் உட்பட வினாடி வினா போட்டியை நடத்துவதற்கு வசதியாக இந்தத் தகவலைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு மைகவ் மற்றும் கலாச்சார அமைச்சகத்திற்கு ஒப்புதல் அளிக்கின்றனர்.
7.இதில் எந்த நெகட்டிவ் மதிப்பெண்களும் இருக்காது.
8.ஒரே பங்கேற்பாளரிடமிருந்து பல பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
9.வினாடி வினாவை தொடங்குக பட்டனை பங்கேற்பாளர் கிளிக் செய்தவுடன் வினாடி வினா தொடங்கும்.
10.குறைந்த நேரத்திற்குள் வினாடி வினாவை முடிக்க நியாயமற்ற வழிகளை பங்கேற்பாளர் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், அந்தப் பதிவு நிராகரிக்கப்படலாம்.
11.வெற்றியாளர் அறிவிப்பு வலைப்பதிவில் (blog.mygov.in) தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்(கள்) வெளியிடப்பட்ட பிறகு வெற்றி பெற்ற தொகை/வெகுமதிகளைப் பெறுவார்கள்.
12.கணினி பிழை அல்லது அமைப்பாளரின் பொறுப்புக்கு அப்பாற்பட்ட வேறு ஏதேனும் பிழை காரணமாக தொலைந்த, தாமதமான, முழுமையடையாத அல்லது அனுப்பப்படாத பதிவுகளுக்கு மைகவ் எந்தப் பொறுப்பையும் ஏற்காது. பதிவை சமர்ப்பித்ததற்கான சான்று, அதை பெற்றதற்கான சான்று அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.
13.எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்பட்டால், எந்த நேரத்திலும் வினாடி வினாவைத் திருத்தவோ திரும்பப் பெறவோ அமைப்பாளர்களுக்கு உரிமை உண்டு. சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக, இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் திருத்துவதற்கான உரிமையும் இதில் அடங்கும்.
14.எந்தவொரு பங்கேற்பாளரின் பங்கேற்போ தொடர்போ, வினாடி வினா அல்லது வினாடி வினா ஏற்பாட்டாளர்கள் அல்லது கூட்டாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கருதினால், எந்தவொரு பங்கேற்பாளரையும் தகுதி நீக்கம் செய்யவதற்கோ மறுப்பதற்கோ ஏற்பாட்டாளர்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. அமைப்பாளர்களால் பெறப்பட்ட தகவல்கள் தெளிவாக இல்லாமல், முழுமையற்றதாக, சேதமடைந்ததாக, பொய்யானதாக அல்லது தவறானதாக இருந்தால் பதிவுகள் செல்லுபடியாகாது.
15.வினாடி வினா மீது அமைப்பாளரின் முடிவே இறுதியானது மற்றும் கட்டாயமானது, மேலும் அது தொடர்பாக எந்த புகாரும்பதிவு செய்யப்பட மாட்டாது.
16.அனைத்து சர்ச்சைகளும் / சட்ட புகார்களும் டெல்லியின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை. இந்த நோக்கத்திற்காக ஏற்படும் செலவுகளை தரப்பினரே ஏற்றுகொள்ள வேண்டும்.
17.வினாடி வினாவில் பங்கேற்பதன் மூலம், மேலே குறிப்பிடப்பட்ட இந்த விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவதை பங்கேற்பாளர் ஏற்றுக்கொள்கிறார் மற்றும் ஒப்புக்கொள்கிறார்.
18.இனிமேல் விதிமுறைகளும் நிபந்தனைகளும் இந்திய சட்டங்களாலும் இந்திய நீதித்துறை அமைப்பின் தீர்ப்புகளாலும் நிர்வகிக்கப்படும்.
19.அனைத்து சர்ச்சைகளும்/ சட்ட புகார்களும் டெல்லியின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை. இந்த நோக்கத்திற்காக ஏற்படும் செலவுகளை தரப்பினரே ஏற்றுகொள்ள வேண்டும்.