GOVERNMENT OF INDIA

9 Years: Seva, Sushasan aur Garib Kalyan Mahaquiz 2023 (Tamil)

Start Date : 30 May 2023, 12:00 am
End Date : 15 Jul 2023, 11:45 pm
Closed
Quiz Closed

About Quiz

அரசின் ஒன்பது ஆண்டு கால சாதனையின் முக்கிய நிகழ்வாக, உலகின் மிகப் பெரிய மக்கள் பங்கேற்புத் தளமான மைகவ், “9 ஆண்டுகள்: சேவா, சுஷாசன் மற்றும் கரிப் கல்யாண் மகாகிஸ் 2023” ஐ வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது. 

 

 இந்த வினாடி வினாவில் உள்ள கருப்பொருள்கள், மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பல்வேறு திட்டங்களின் மூலம் அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்குமான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன. இந்தியாவின் உற்பத்தித் திறன்களின் வலிமையை வலுப்படுத்துவது மூலம் ஆத்மநிர்பர் பாரத் முயற்சியினால் இந்தியா உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது நாடு சமூக, பொருளாதார மற்றும் டிஜிட்டல் துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து, அதன் குடிமக்களின் வாழ்க்கையை கணிசமாக மேம்படுத்துகிறது. “சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா பிராயாஸ், சப்கா விஷ்வாஸ்” என்பது இந்தியாவை உலகளாவிய வரைபடத்தில் வைப்பதற்கான உள்ளடக்கிய மற்றும் முற்போக்கான மந்திரமாகும்.

 கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவின் புகழ்பெற்ற சாதனைகள் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்க, மைகவ் “9 ஆண்டுகள்: சேவா, சுஷாசன் மற்றும் கரிப் கல்யாண் மகாகிஸ் 2023” ஐ நடத்துகிறது. குடிமக்களை ஈடுபடுத்தவும், முன்னேற்றம் குறித்து அவர்களுக்கு தெரிவிக்கவும் இந்த வினாடி வினா ஆங்கிலம் மற்றும் இந்தி உட்பட பன்னிரண்டு மொழிகளில் நடத்தப்படுகிறது.

எனவே உங்கள் சிந்தனை தொப்பிகளை அணிந்து, அற்புதமான பரிசுகளை வெல்லுங்கள்!

Terms and Conditions

1.வினாடி-வினா போட்டி அனைத்து இந்திய குடிமக்களுக்குமானது.

2.வினாடி வினாவுக்கான அணுகல் மைகவ் இயங்குதளம் மூலமாக மட்டுமே இருக்கும், வேறு எந்த சேனல்களும் இல்லை.

3.பங்கேற்பாளர் “ஸ்டார்ட் க்விஸ்” ஆப்ஷன்னை கிளிக் செய்தவுடன் வினாடி வினா தொடங்கும்.

4.இது 09 வினாக்களைக் கொண்ட நேரம் சார்ந்த வினாடி வினா ஆகும், இதற்கு 250 வினாடிகளில் பதிலளிக்க வேண்டும்.

5.வினா வங்கியில் இருந்து தானியங்கி முறையில் வினாக்கள் தோராயமாக தேர்வு செய்யப்படும்.

6.வினாடி வினாவின் ஒவ்வொரு கேள்வியும் மல்டிபிள் சாய்ஸ் பார்மட்டில் ஒரே ஒரு சரியான விடையுடன் இருக்கும். 

7.இதில் எந்த நெகட்டிவ் மதிப்பெண்களும் இருக்காது. பங்கேற்பாளர்கள் மொத்தமாக அனைத்து கேள்விகளையும் முயற்சிக்க வேண்டும்.

8.வினாடிவினாவில் நுழைவதன் மூலம், பங்கேற்பாளர் குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவதற்கு ஒப்புக்கொள்கிறார்.

9.ஒரு நபர் ஒரு முறை மட்டுமே பங்கேற்க முடியும். ஒரே பங்கேற்பாளரிடமிருந்து பல பதிவுகள் பெறப்பட்டால் அவை பரிசீலிக்கப்படாது, மேலும் அவை நிராகரிக்கப்படும்.

10.உங்கள் பெயர், இமெயில் முகவரி, தொலைபேசி எண், அஞ்சல் முகவரி ஆகியவற்றை நீங்கள் அளிக்க வேண்டும். உங்கள் தொடர்பு விவரங்களை சமர்ப்பிப்பதன் மூலம், வினாடி வினா மற்றும் விளம்பர உள்ளடக்கத்தைப் பெற பயன்படுத்தப்படும் இந்த விவரங்களுக்கு நீங்கள் ஒப்புதல் அளிக்கிறீர்கள்.

11.வெற்றிகரமாக முடித்த பின்னர், பங்கேற்பாளர்கள் தங்கள் பங்கேற்பு மற்றும் நிறைவை அங்கீகரிக்கும் டிஜிட்டல் பங்கேற்பு சான்றிதழை தாமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

12.முதல் 2000 பங்கேற்பாளர்கள் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் மற்றும் தலா ₹1,000/- நன்கொடை பெற தகுதியுடையவர்கள் ஆவார்.

13.அறிவிக்கப்பட்ட வெற்றியாளர்கள் தங்கள் மைகவ் சுயவிவரத்தில் பரிசுத் தொகை வழங்குவதற்கான வங்கி விவரங்களை புதுப்பிக்க வேண்டும். மைகவ் புரொஃபைலில் உள்ள பயனர் பெயர் பரிசுத் தொகை வழங்குவதற்கான வங்கிக் கணக்கில் உள்ள பெயருடன் பொருந்த வேண்டும்.

14.எதிர்பாரா நிகழ்வுகள் ஏற்பட்டால் எந்த நேரத்திலும் வினாடி வினாவை திருத்தவோ அல்லது நிறுத்தவோ மைகவ்வுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. சந்தேகத்தை தவிர்ப்பதற்காக, இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைக ளை மாற்றும் திறனும் இதில் அடங்கும். 

15.வினாடி வினா, மைகவ் அல்லது தொடர்புடைய கூட்டாளர்களின் ஒருவருடைய பங்கேற்பு தீங்கு விளைவிக்கும் என்று நம்பினால், எந்தவொரு பங்கேற்பாளரையும் தகுதி நீக்கம் செய்ய மைகவ்விற்கு உரிமை உண்டு. மைகவ் மூ லம் பெறப்பட்ட தகவல்கள் முறையற்றவையாகவோ, முழுமையடையாதவையாகவோ இருந்தால் பதிவுகள் செல்லாது, மைகவ் ஊழியர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் இந்த வினாடி வினா போட்டியில் கலந்து கொள்வதிலி ரு ந்து விலக்கப்படுகிறார்கள்.

16.வினாடி வினா மீதான மைகவ்வின் முடிவு இறுதியானது மற்றும் பிணைப்புக்குரியது மற்றும் இது தொடர்பாக எந்த கடிதப் பரிமாற்றமும் மேற்கொள்ளப்படாது.

17.இதில் கலந்து கொள்பவர்கள் அனைத்து அப்டேட்டுகளுக்காக தேவையான உள்ளடக்கத்தை தவறாமல் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.