
வருமான வரிச் சட்டம் 2025, வருமான வரிச் சட்டம் 1961-ஐ இன்னும் தெளிவான, எளிமையான மற்றும் நவீன சட்டத்துடன் மாற்றுவதன் மூலம் இந்தியாவின் நேரடி வரி விதிப்பு கட்டமைப்பில் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது. சிக்கலைக் குறைக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் மற்றும் இணக்கத்தை எளிதாக்கவும் வடிவமைக்கப்பட்ட இந்த புதிய சட்டம், வரி செலுத்துவோருக்கு உகந்த மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வரி முறைமையை நோக்கிய குறிப்பிடத்தக்க படியாகும்.
பல தசாப்த கால வரி சீர்திருத்தங்களின் அடிப்படையில், குடிமக்கள், வணிகங்கள் மற்றும் வல்லுநர்கள் வருமான வரிச் சட்டங்களை எளிதில் புரிந்துகொண்டு செயல்படுத்துவதற்காக இந்திய அரசு வருமான வரிச் சட்டம் 2025-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய சட்டம் எளிமைப்படுத்துதல், விதிகளின் தெளிவு மற்றும் மேம்பட்ட வரி செலுத்துவோர் சேவைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதோடு, தானாக முன்வந்து வரி செலுத்துவதை வலுப்படுத்துகிறது.
இந்த முக்கியமான சீர்திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புதிய வரி கட்டமைப்பில் குடிமக்கள் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும், வருமான வரித் துறை மைகவ் உடன் இணைந்து வருமான வரிச் சட்டம் 2025 குறித்த வினாடி வினாவை நடத்துகிறது.
இந்த வினாடி வினா குடிமக்கள், மாணவர்கள், வல்லுநர்கள், தொழில்முனைவோர் மற்றும் வரி செலுத்துவோர் தங்கள் அறிவைச் சோதிக்கவும், வருமான வரிச் சட்டம் 2025-இன் முக்கிய அம்சங்களைப் புரிந்துகொள்ளவும் மற்றும் வெளிப்படையான, திறமையான மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட வரி விதிப்பு முறையை உருவாக்குவதில் அதன் பங்கைப் பாராட்டவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
வினாடி வினாவில் பங்கேற்று, உங்கள் புரிதலை மேம்படுத்தி, எளிமையான, புத்திசாலித்தனமான மற்றும் உள்ளடக்கிய நேரடி வரி விதிப்பை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் ஒரு அங்கமாக இருங்கள்.
பரிசு:
• முதல் 10 வெற்றியாளர்களுக்கு தலா 10,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
• அடுத்த 20 வெற்றியாளர்களுக்கு தலா 5,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
• அடுத்தடுத்த 50 வெற்றியாளர்களுக்கு தலா 3,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
• அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் மின்-பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
1) வினாடி வினாவில் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் பங்கேற்கலாம்.
2) பங்கேற்பாளர் ‘வினாடி வினா விளையாட’ பட்டனை கிளிக் செய்தவுடன் வினாடி வினா தொடங்கும்.
3) இது 300 வினாடிகளில் பதிலளிக்க வேண்டிய 10 கேள்விகளைக் கொண்ட வினாடி வினா ஆகும். எதிர்மறை மதிப்பெண்கள் கிடையாது.
4) ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளில் கேட்கப்படும் கேள்விகளில் ஏதேனும் முரண்பாடுகள் அல்லது பிழைகள் இருந்தால், ஆங்கிலத்தில் உள்ள கேள்வியே இறுதியானது மற்றும் செல்லுபடியாகும்.
5) குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு பதிலளிப்பது பரிசீலிக்கப்படாது.
6) தொடர்பு கொள்ளவதற்காக, தங்களின் மைகவ் சுயவிவரம் புதுப்பிக்கப்பட்டுள்ளதை பங்கேற்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும். முழுமையற்ற சுயவிவரம் வெற்றியாளராக தகுதி பெறாது.
7) ஒவ்வொரு பங்கேற்பாளரும் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடி மூலம் ஒரு முறை மட்டுமே வினாடி வினாவை விளையாட அனுமதிக்கப்படுவார்கள். ஒரே மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பங்கேற்பதற்காக பயன்படுத்தக்கூடாது.
8) ஒரு பங்கேற்பாளர் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி இரண்டையும் பயன்படுத்தி விளையாடியிருந்தால், சமர்ப்பிக்கப்பட்ட ஒரு பதிவு மட்டுமே செல்லுபடியாகும் மற்றும் வெற்றியாளர் தேர்வு செயல்முறைக்கு தகுதியானதாகக் கருதப்படும்.
9) எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டால் எந்த நேரத்திலும் வினாடி வினாவை மாற்றியமைக்கவோ அல்லது நிறுத்தவோ மைகவ்-க்கு உரிமை உண்டு. சந்தேகத்தை தவிர்ப்பதற்காக, விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மாற்றும் உரிமையும் இதில் அடங்கும்.
10) பங்கேற்பாளர்கள் தங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி, கடித முகவரி மற்றும் மொபைல் எண்ணை வழங்க வேண்டும். விவரங்களை சமர்ப்பிப்பதன் மூலம், வினாடி வினா நோக்கத்திற்காக இந்த விவரங்கள் பயன்படுத்தப்படுவதற்கு பங்கேற்பாளர்கள் ஒப்புதல் அளிக்கிறார்கள்.
11) வினாடி வினாவிற்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் ஏதேனும் பங்கேற்பாளரின் பங்கேற்பு அல்லது தொடர்பு இருப்பதாகக் கருதினால், அந்தப் பங்கேற்பாளரைத் தகுதிநீக்கம் செய்ய அல்லது பங்கேற்பதை மறுக்க அமைப்பாளர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. பெறப்பட்ட தகவல்கள் சட்டவிரோதமானவை, முழுமையற்றவை, சேதமடைந்தவை, தவறானவை அல்லது பிழையானவை என்றால் பங்கேற்பு செல்லுபடியாகாது.
12) கணினிப் பிழை அல்லது ஏற்பாட்டாளரின் நியாயமான கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வேறு ஏதேனும் பிழை காரணமாக தொலைந்து போன, தாமதமான அல்லது முழுமையடையாத அல்லது அனுப்பப்படாத உள்ளீடுகளுக்கு மைகவ் எந்தப் பொறுப்பையும் ஏற்காது. உள்ளீட்டை சமர்ப்பித்ததற்கான ஆதாரம், அதைப் பெற்றதற்கான ஆதாரம் அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.
13) Income Tax Department மற்றும் MyGov இன் ஊழியர்கள் அல்லது இந்தப் போட்டியை நடத்துவதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய ஊழியர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கத் தகுதியில்லை. இந்தத் தகுதியின்மை அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் பொருந்தும்.
14) நீதி மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக வெற்றியாளர் தேர்வு முறைமையால் உருவாக்கப்பட்ட சீரற்ற தேர்வு முறை மூலம் நடத்தப்படும். சரியான பதில்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பித்தல் உள்ளிட்ட குறிப்பிடப்பட்ட வினாடி வினா வெற்றி அளவுகோல்களை பூர்த்தி செய்யும் அனைத்து பங்கேற்பாளர்களும் தகுதியுள்ள உள்ளீடுகளின் மையப்படுத்தப்பட்ட தொகுப்பில் சேர்க்கப்படுவார்கள். வெற்றியாளர்கள் முற்றிலும் தானியங்கி சீரற்ற தேர்வு செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
15) வினாடி வினா குறித்த அமைப்பாளரின் முடிவே இறுதியானது மற்றும் கட்டுப்படுத்தக்கூடியது, மேலும் இது தொடர்பாக எந்தத் தொடர்பும் கொள்ளப்படமாட்டாது.
16) இதில் கலந்து கொள்பவர்கள் அனைத்து அப்டேட்டுகளுக்காக உள்ளடக்கத்தை தவறாமல் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
17) வெற்றிகரமாக முடித்த பின்னர், பங்கேற்பாளர்கள் தங்கள் பங்கேற்பு மற்றும் நிறைவை அங்கீகரிக்கும் டிஜிட்டல் பங்கேற்பு சான்றிதழை தாமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
18) வினாடி வினாவில் பங்கேற்பதன் மூலம், ஏதேனும் திருத்தங்கள் அல்லது கூடுதல் புதுப்பிப்புகள் உட்பட வினாடி வினா போட்டியின் அனைத்து விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் பங்கேற்பாளர்கள் இணங்க வேண்டும்.
19) அனைத்து சர்ச்சைகளும்/ சட்ட புகார்களும் டெல்லியின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை. இந்த நோக்கத்திற்காக செய்யப்படும் செலவுகள் தொடர்புடையவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும்.
20) இனிமேல் விதிமுறைகளும் நிபந்தனைகளும் இந்திய சட்டங்களாலும் இந்திய நீதித்துறை அமைப்பின் தீர்ப்புகளாலும் நிர்வகிக்கப்படும்.