டிஜிட்டல் இந்தியாவின் 10 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில், டிஜிட்டல் இந்தியா வினாடி வினா – முன்னேற்றத்தின் பத்தாண்டுகள் என்பதில் பங்கேற்பதற்கு குடிமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.
நாடு முழுவதும் நிர்வாகத்தை மாற்றியமைத்தல், டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் சேவை வழங்கலை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்த டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த வினாடி வினாவின் நோக்கமாகும்.
டிஜிட்டல் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய, டிஜிட்டல் அதிகாரமளித்தல், மின்–ஆளுமை முயற்சிகள், பொது டிஜிட்டல் சேவைகள், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் போன்ற முக்கிய அம்சங்களில் இந்த வினாடி வினா கவனம் செலுத்தும்.
டிஜிட்டல் இந்தியா வினாடி வினாவில் பங்கேற்று, கடந்த பத்தாண்டு கால டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் நடந்த முக்கிய சாதனைகள் மற்றும் முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்வதற்கு குடிமக்களை மைகவ் அழைக்கிறது.
வெகுமதிகள்
1. முதல் 50 வெற்றியாளர்களுக்கு தலா ₹ 5,000/-
பரிசாக வழங்கப்படும்
2. அடுத்த 100 வெற்றியாளர்களுக்கு தலா ₹ 2,000/-
பரிசாக வழங்கப்படும்
3. அடுத்த 200 வெற்றியாளர்களுக்கு தலா ₹ 1,000/- பரிசாக வழங்கப்படும்
1. வினாடி வினாவில் அனைத்து இந்திய குடிமக்களும் பங்கேற்கலாம்.
2. பங்கேற்பாளர் ‘வினாடி வினாவில் பங்கேற்கவும்‘ என்பதைக் கிளிக் செய்தவுடன் வினாடி வினா தொடங்கும்.
3. இது 300 வினாடிகளில் 10 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நேர வினாடி வினா ஆகும். எதிர்மறை மதிப்பெண்கள் கிடையாது.
4. மேலும் தொடர்பு கொள்ளவதற்காக, தங்களின் மைகவ் சுயவிவரம் புதுப்பிக்கப்பட்டுள்ளதை பங்கேற்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும். முழுமையற்ற சுயவிவரம் வெற்றியாளராக தகுதி பெறாது.
5. ஒரு பயனரால் ஒருமுறை மட்டுமே பங்கேற்க முடியும் மற்றும் சமர்பித்த பின் அதை திரும்பப் பெற முடியாது. ஒரே பங்கேற்பாளர்/மின்னஞ்சல் ஐடி/மொபைல் எண் மூலம் செய்யப்படும் பல பங்கேற்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
6. வினாடி வினாவின் ஹோஸ்டிங்குடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடைய ஊழியர்கள், வினாடி வினாவில் பங்கேற்க தகுதியற்றவர்கள். இந்த தகுதியின்மை அவர்களின் உடனடி குடும்ப உறுப்பினர்களுக்கும் பொருந்தும்.
7. அதிக பங்கேற்பையும் நியாயத்தையும் ஊக்குவிக்கும் வகையில், ஒரு குடும்பத்தில் இருந்து ஒரு வெற்றியாளர் மட்டுமே பரிசுக்கு தகுதி பெறுவார்.
8. எந்தவொரு பங்கேற்பாளரின் பங்கேற்போ தொடர்போ வினாடி வினாவிற்கு தீங்கு விளைவிக்கும் என்று கருதினால், எந்தவொரு பங்கேற்பாளரின் பங்கேற்பையும் தகுதி நீக்கம் செய்வதற்கோ மறுப்பதற்கோ ஏற்பாட்டாளர்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. பெறப்பட்ட தகவல்கள் சட்டவிரோதமானவை, முழுமையற்றவை, சேதமடைந்தவை, தவறானவை அல்லது பிழையானவையாக இருந்தால் பங்கேற்பு செல்லுபடியாகாது.
9. தொலைந்துபோன, தாமதமான அல்லது முழுமையற்ற அல்லது கணினி பிழை அல்லது அமைப்பாளரின் நியாயமான கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வேறு ஏதேனும் பிழை காரணமாக அனுப்பப்படாத உள்ளீடுகளுக்கு ஏற்பாட்டாளர்கள் எந்தப் பொறுப்பையும் ஏற்க மாட்டார்கள். உள்ளீட்டை சமர்ப்பித்ததற்கான ஆதாரம், அதைப் பெற்றதற்கான ஆதாரம் அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.
10. எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்பட்டால், எந்த நேரத்திலும் போட்டியின் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை திருத்தவோ பரிசீலிக்கப்பட்டபடி போட்டியை ரத்து செய்யவோ ஏற்பாட்டாளர்களுக்கு உரிமை உண்டு. சந்தேகத்தை தவிர்ப்பதற்காக, இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மாற்றும் திறனும் இதில் அடங்கும். அனைத்து புதுப்பிப்புகளையும் பங்கேற்பாளர்கள் வலைத்தளத்தில் பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
11. வினாடி வினா குறித்த ஏற்பாட்டாளர்களின் முடிவே இறுதியானது மற்றும் கட்டாயமானது மற்றும் அதே தொடர்பாக எந்தவொரு கருத்தும் பதிவு செய்யப்படாது.
12. அனைத்து சர்ச்சைகளும்/ சட்ட புகார்களும் டெல்லியின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை. இந்த நோக்கத்திற்காக செய்யப்படும் செலவுகள் கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்படும்.
13. வினாடி வினாவில் பங்கேற்பதன் மூலம், ஏதேனும் திருத்தங்கள் அல்லது கூடுதல் புதுப்பிப்புகள் உட்பட வினாடி வினா போட்டியின் அனைத்து விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் பங்கேற்பாளர்கள் இணங்க வேண்டும்.
14. இனிமேல் விதிமுறைகளும் நிபந்தனைகளும் இந்திய சட்டங்கள் மற்றும் இந்திய நீதித்துறை அமைப்பின் தீர்ப்புகளால் நிர்வகிக்கப்படும்.